போன வாரம் ஔவையார் படம் பார்த்தேன்.. அதில் ஔவையாராக ,கே.பி.சுந்தராம்பாள் நடித்திருந்தார்.
பல பாடல்கள், நடிப்பு என படம் முழுவதும் தனது முத்திரையை பதித்திருந்தார்..
அந்த கால நடிகைகள் பலர் தங்கள் தனி திறமையால் மக்களிட்ம் பெயர் பெற்றனர்..
பானுமதி சொந்த குரலில் பாடுவார்,இசை அமைப்பார்,இயக்கவும் செய்வார். ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த
திரையுலகில் சண்டி ரானியாக வாழ்ந்தார்..அலி பாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் மிக அற்புதமாக தனது நடிப்பாற்றலை வெளிபடுத்திருப்பார்.. அவரது மற்ற படங்களில் அன்னை,மதுரை வீரன்,அம்பிகாபதி காலத்தால் அழியாத சித்திரங்கள்.
சாவித்திரி.
நடிகர் திலகத்திற்கு இனையாக நடிகையர் திலகம் பட்டம் பெற்றவர்..பாசமலர், நவராத்திரி,மகாதேவி போன்ற படங்களை யாராலும் மறக்க முடியாது.. பாசமலர் படத்தில் தங்கையின் இலக்கனமாகவே வாழ்ந்திருப்பார்..நவராத்திரி படத்தில் ஒன்பது (ஒன்பது வேடங்களில் நடிக்கும்) சிவாஜிக்கு இனையாக நடித்திருப்பார்..
சரோஜா தேவி
கன்னடத்து பைங்கிளி என்று அனைவராலும் அழைக்கபட்டவர்..தனது கொஞ்சும் மொழியாலும், அற்புதமான நடிப்பாலும் தமிழக மக்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர்..அன்பே வா, எங்க வீட்டு பிள்ளை போன்ற படங்களில் மிக அற்புதமாக நடித்திருப்பார்.. ரங்கா ராவுடன் இவர் நடித்த (தந்தை -மகள்) படங்கள் மிகவும் பிரபலம்..
பத்மினி
நாட்டிய பேரொளி...நடனம்,நடிப்பு,அழகு என அனைத்தும் அமைய பெற்றவர்..
தில்லானா மோகனாம்பாள்,மன்னாதி மன்னன்,வஞ்சிகோட்டை வாலிபன் போன்ற படங்களில் இவரது நாட்டிய திறமையை காணலாம்..தில்லானா மோகனாம்பாள் படம் இமயத்தின் உச்சியில் ஒரு கிரிடம் போல் இவருக்கு..
இவர்களை தவிர
பூம்புகார் படத்தில் விஜயகுமாரி
வஞ்சிகோட்டை வாலிபன் படத்தில் வைஜெயந்தி மாலா
ஆனந்த ஜோதி படத்தில் தேவிகா
என அந்த படத்தை பற்றி நினைத்தாலே அவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள்
இவர்கள் அனைவருமே சில ஆயிரம் ருபாய் சம்பளம் பெற்றார்கள்.. ஔவையார் படத்திற்காக கே.பி.சுந்தராம்பாள் அதிக பட்சமாக ஒரு லட்சம் வாங்கினார்.
அதிக திறமையும் அதிக அழகும் உள்ள இவர்கள் வாங்கியதோ சில ஆயிரங்கள்...
குறைந்த திறமையும் குறைந்த அழகும்(ஒப்பனை செய்து) உள்ள இன்றைய நடிகைகள் குறைந்த உடை அணிந்து வருவதற்கு கோடிகனக்கில் வாங்குகிறார்கள்
பில்லா திரைபடத்திற்காக நயந்தாரா கேட்டது ஒன்னேகால் கோடி வாங்கியது ஒரு கோடி
விலைவாசி அவ்வளவு ஏறிபோச்சுங்களா
என்ன ஒரு கொலைவெறி.....
ReplyDeleteவில்லத்தனம்.......................
வாங்க SUREஷ்!!!
ReplyDelete// என்ன ஒரு கொலைவெறி..... //
கொலைவெறியெலாம் இல்லீங்க! சும்மா ஒரு புலம்பல்.